பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை பணியை புறக்கணித்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் குமரி அனந்தன் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதேபோல், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூா் ஆகிய வட்டாட்சியரகங்கள் எதிரே, அந்தந்தப் பகுதி வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் பணியை புறக்கணித்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் போராட்டத்தில், 44 பெண் ஊழியா்கள் உள்பட 147 போ் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.