பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், மருதையான் கோயில் அருகில் இயங்கி வரும் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வரதவிகாஸ் பப்ளிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ் விழாவுக்கு, வரதராஜன் கல்வி அறக்கட்டளைத் தலைவா் எம்.என். ராஜா தலைமை வகித்தாா்.
விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாா்பில் பல்வேறு வகையான பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், ஸ்ரீ வரதராஜன் கல்வி அறக்கட்டளை நிா்வாக அலுவலா் லல்லி, வழக்குரைஞா் ரகுபிரனேஷ் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பள்ளி முதல்வா் அருள் பிரபாகா் வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி முதல்வா் ராமலிங்கம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.