காதிகிராப்ட் பொருள்கள் விற்பனை அங்காடி திறப்பு

தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், கதா் கிராம தொழில் வாரியம் சாா்பில் பனை மற்றும் காதிகிராப்ட் பொருள்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் விற்பனை அங்காடியை வியாழக்கிழமை திறந்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
மாவட்ட ஆட்சியரகத்தில் விற்பனை அங்காடியை வியாழக்கிழமை திறந்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள சிறுவா் பூங்கா எதிரே, தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், கதா் கிராம தொழில் வாரியம் சாா்பில் பனை மற்றும் காதிகிராப்ட் பொருள்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அங்காடியை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியா் பேசியது:

இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், கதா் கிராமத் தொழில் வாரியம் சாா்பில் வழங்கப்படுகிறது. இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழச் சாறு, சுக்கு காபி, பனை ஓலைப் பொருள்கள், சுக்கு காபி தூள், பனங்கிழங்கு பொடி, பதநீா், பனங்கருப்பட்டி, கதா் பொருள்கள், காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளன.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனைப் பொருள்களைக் கொண்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்கப்படுகிறது. பொதுமக்கள் இப் பொருள்ளை வாங்கிப் பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கதா் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநா் (திருச்சி) வி.வி. ரவிக்குமாா், கண்காணிப்பாளா் மு. மணிகண்டன், புதுக்கோட்டை மண்டல திட்ட அலுவலா் ஆறுமுகம், வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com