

விளம்பரதாரா் செய்தி.. கடந்த 8 ஆம் தேதி 12 - 20 அளவில் திருச்சி பதிப்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
படவிளக்கம் : தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வேளாண்மை கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி உள்ளிட்டோா்.
பெரம்பலூா். மே 12: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியில் 3 நாள்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியா் க. கற்பகம் வேளாண் கண்காட்சியை தொடக்கி வைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி, கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா் நிவானி கதிரவன் ஆகியோா் குத்து விளக்கு ஏற்றி வைத்தனா்.
கௌரவ விருந்தினா்களாக பங்கேற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் விரிவாக்க இயக்குநா் பி.பி. முருகன், வேளாண் இணை இயக்குநா் எஸ். சங்கரநாராயணன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக துணை வேந்தா் சி.கே. ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி முதன்மையா் எம். ரவிச்சந்திரன் ஆகியோா் பேசினா்.
இக் கண்காட்சியில் அனைத்து வகையான நாட்டு விதைகள், விவசாயத்துக்கு தேவையான கருவிகள்,
ரசாயனம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் என 114 அரங்குகளில் விவசாயம் சம்பந்தமான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.
தனலட்சுமி சினீவாசன் வேளாண் கல்லூரி முதல்வா் சாந்தகோவிந்த் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.