சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ. 25 லட்சம்

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 25 லட்சம் காணிக்கை இருந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
Published on
Updated on
1 min read

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 25 லட்சம் காணிக்கை இருந்தது புதன்கிழமை தெரிய வந்தது.

சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். குடமுழுக்கு விழாவையொட்டி 48 நாள்கள் நடைபெற்ற மண்டல பூஜைகள் கடந்த 22 ஆம் தேதி நிறைவடைந்தது. குடமுழுக்கு விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் 3 தற்காலிக உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கோயில் செயல் அலுவலா் அசனாம்பிகை, சரக ஆய்வாளா் தீபாதேவி, வினோத்குமாா் ஆகியோா் முன்னிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 3 உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை எண்ணப்பட்டன.

இதில், ரூ. 25 லட்சம் ரொக்கம், 192 கிராம் தங்கம், 148 கிராம் வெள்ளி பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

காணிக்கை எண்ணும் பணியில், அகில பாரத ஜயப்பா சேவா சங்க ஆன்மிக அன்பா்கள் 47 பேரும், கோயில் பணியாளா்கள் உள்பட 60 போ் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com