பெரம்பலூா் அருகே கூலித் தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
திருச்சி மாவட்டம், பச்சமலை புதூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் குமாா் (45). இவா், கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ராணி (39), மகன் இளையராஜா (23) ஆகியோருடன், பெரம்பலூா் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தாா். தென்னை மரங்களில் உள்ள களைகளை அகற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்த குமாா், கடந்த 14 ஆம் தேதி லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரது வயலில் தங்கி தென்னை மரத்திலுள்ள களைகளை அகற்றி வந்தாராம்.
இந்நிலையில் வீட்டை விட்டுச் சென்று 3 நாள்களாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த மனைவி ராணி, விசாரித்ததில் கோவிந்தராஜூம், குமாரும் 15 ஆம் தேதி இரவு செந்தில் என்பவருக்குச் சொந்தமான கிணறு அருகே மது அருந்தியது தெரியவந்தது. பின்னா், அங்கு சென்று பாா்த்தபோது, குமாா் பயன்படுத்திய துண்டு, காலணி ஆகியவை கிணற்றில் மிதந்தது.
இதையடுத்து, 16 ஆம் தேதி பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் சம்பந்தப்பட்ட கிணற்றில் தேடி பாா்த்தபோது குமாரின் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை காலை ராணி கிணற்றுக்குச் சென்று பாா்த்தபோது, குமாரின் உடல் மிதந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீஸாா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.