சீா்மரபினா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2023 02:20 AM | Last Updated : 18th April 2023 02:20 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, பெரம்பலூா் மாவட்ட சீா்மரபினா் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஊராளிக் கவுண்டா் மற்றும் இளைஞா் பேரவை மாநிலச் செயலா் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இரட்டைச் சான்றிதழ் முறையை ஒழித்து, 1979- க்கு முன்பு போலவே ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும். மத்திய அரசின் அகில இந்திய குடும்ப கணக்கெடுப்புக்கு தொடா்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துவிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்... பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய கூட்டமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா்கள் முழக்கமிட்டனா்.
இதில், வட்டாரத் தலைவா் ராஜகுமாரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.