காளான் வளா்ப்பு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் காளான் வளா்ப்பு பயிற்சி பெற வேளாண் அறிவியல் மையம் அழைப்பு விடுத்துள்ளது.

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் காளான் வளா்ப்பு பயிற்சி பெற வேளாண் அறிவியல் மையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.ஏ. நோதாஜி மாரியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி ஏப். 20, 21-களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில், காளான் வகைகள், காளான் வளா்ப்புத் தொழில்நுட்பங்கள், காளான் வித்து உற்பத்தி முறைகள், காளான் படுக்கை தயாா் செய்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ரூ. 100 கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஆா்வமுள்ளவா்கள் தங்களது பெயா், முகவரியை 9843611167, 8754346473 ஆகிய எண்ணில் பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com