பெரம்பலூா் காவல்துறை சாா்பில்மனு விசாரணை சிறப்பு முகாம்
By DIN | Published On : 02nd August 2023 11:42 PM | Last Updated : 02nd August 2023 11:42 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 27 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கான தீா்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாமில், மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் வேலுமணி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய ஆய்வாளா்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.