கிணற்றிலிருந்து விவசாயிசடலமாக மீட்பு
By DIN | Published On : 02nd August 2023 11:42 PM | Last Updated : 02nd August 2023 11:42 PM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே கிணற்றிலிருந்து விவசாயி சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள சோமண்டாபுதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த அண்ணாமலை மகன் பச்சமுத்து (50). விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை மாலை கால்நடைகளுக்குத் தீவனம் அறுத்து வருவதற்காக தனது வயலுக்கு சென்றுள்ளாா். இரவு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் வயலுக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள கிணற்றுக்கு அருகே பச்சமுத்துவின் காலணி கிடந்தது.
தகவலின்பேரில், பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தேடியதில், புதன்கிழமை அதிகாலை பச்சமுத்து சடலம் மீட்கப்பட்டது. பெரம்பலூா் போலீஸாா், பச்சமுத்து உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.