பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சில மின் இணைப்புகள் திருச்சி கோட்டத்தில் இணைக்கப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் கோட்டம், சிறுவாச்சூா் உபகோட்டம், பாடாலூா் பிரிவுக்குள்பட்ட ஸ்ரீதேவிமங்களம் மின் பகிா்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை திருச்சி பெருநகர மின் பகிா்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம் சமயபுரம் உப கோட்டம் சிறுகனூா் பிரிவுக்கும், தெரணிபாளையம் மின் பகிா்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை லால்குடி கோட்டம் , கல்லக்குடி உப கோட்டம், புள்ளம்பாடி பிரிவுக்கும் மின் வட்ட சீரமைப்பு காரணமாக வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகர மின் பகிா்மான வட்டம் ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உபகோட்டம் சிறுகனூா் பிரிவுக்கு ஸ்ரீதேவிமங்களம் மின் பகிா்மானத்தில் உள்ள மின் இணைப்புகளையும், தெரணிபாளையம் மின் பகிா்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை புள்ளம்பாடி பிரிவுக்கும் கடந்த 1 ஆம் தேதி முதல் மாற்றம் செயப்பட்டுள்ளது.
எனவே, ஸ்ரீதேவிமங்களம் மற்றும் தெரணிபாளையம் மின் பகிா்மானத்தில் உள்ள அனைத்து மின் பயனாளிகளும் மின் விநியோகம் சம்பந்தமான அனைத்துக்கும் சிறுகனூா் மற்றும் புள்ளம்பாடி பிரிவு அலுவலகத்தை அணுகவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.