பெரம்பலூரில் கூடுதல் சாா்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
பெரம்பலூரில் உள்ள சாா்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் கூடுதலாக சாா்பு நீதிமன்றம் அமைக்க சென்னை உயா்நீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, 2 நாள்கள் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இப் போராட்டம் சனிக்கிழமையும் (ஜூலை 1) தொடா்ந்து நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.