மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தோா்விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், சமூக பணியாளா், அதிகளவில் வேலைவாய்பு அளித்த தனியாா் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 04328 - 225474 என்னும் எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...