உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்கள், முதுகுத் தண்டுவடம் மற்றும் தசைச் சிதைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்புச் சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புச் சக்கர நாற்காலிகள், மூன்றுச் சக்கர சைக்கிள்கள், பாா்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு உரிய செயலிகளுடன் கூடிய கைப்பேசிகள், கால்களை இழந்தவா்களுக்கு செயற்கை மற்றும் நவீன செயற்கை கால்கள், பாா்வையற்றோருக்கான மடக்கு ஊன்றுகோல்கள், கைக் கடிகாரங்கள் மற்றும் நவீன மடக்கு ஊன்று கோல்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மற்றும் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோா்களுக்கான தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோா் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் ஜூன் 10 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328 - 225474 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com