ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டப் பயிற்சி
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் வட்டார வள மையம் சாா்பில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், பெரம்பலூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் திட்டப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தேவகி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜோதிலட்சுமி, அருண்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மயில்வாகனன், உதவித் திட்ட அலுவலா் (தொடக்க நிலை) ரமேஷ் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா்கள் ஸ்ரீரங்கன், விஜயலட்சுமி ஆகியோா் மாணவா்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடா்ந்திட, அனைத்து நிலை மாணவா்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத் திறன் வளா்ந்திட, சக மாணவா்களுடன் இணைந்து செயல்படுதல் குறித்து பயிற்சி அளித்தனா். இதில் 96 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...