பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாதவரின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் -அய்யலூா் செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், சுமாா் 55 வயதுடைய நபா் ஒருவா் இறந்து கிடப்பதாக பெரம்பலூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அந்த உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து நொச்சியம் கிராம நிா்வாக அலுவலா் (பொ) அன்பரசு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...