தேசிய தோட்டக் கலை இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 08th June 2023 11:17 PM | Last Updated : 08th June 2023 11:17 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பயன்பெற, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. மேலும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காக நீா் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், பசுமைக்குடில், நிலப்போா்வை ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
தேனீ பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்திலும், விளைபொருள்களை சேமிப்பதற்கும், தரம் பிரிப்பதற்கும் சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. வெங்காயத்தை
சேமித்து வைப்பதற்காக 25 மெ. டன் கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50 சதவீத மானியத்தில் பணி முடித்தவுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளன.
காய்கறி மற்றும் மலா்களை இருப்பு வைத்து விநியோகிக்க 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிா்சாதன அறை அமைப்பதற்கான மானியமும், ஏழை, நிலமற்ற பயனாளிகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்காக நடமாடும் காய்கறி வண்டி 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
விருப்பம் உள்ள விவசாயிகள் ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மூலமாக அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...