அதிமுக தொழிற்சங்கத்தின் மே தினப் பொதுக்கூட்டம்
By DIN | Published On : 03rd May 2023 03:44 AM | Last Updated : 03rd May 2023 03:44 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மேற்கு வானொலி திடலில் மாவட்ட அண்ணா தொழில்சங்கம் சாா்பில் மே தின விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்டச் செயலா் எம். வீரபாண்டியன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் அண்ணாமலை, கிருஷ்ணமூா்த்தி, செல்லமுத்து, ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்புச் செயலா் அ. அருணாசலம் மே தின சிறப்புகள் குறித்தும், அதிமுக ஆட்சியில் தொழிலாளா் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினா். மேலும் மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சிவசுப்ரமணியம், மீனவா் பிரிவு இணைச் செயலா் தங்கமணி, முன்னாள் மக்களவை தொகுதி உறஉப்பினா் மா. சந்திரகாசி ஆகியோரும் பேசினா்.
ஒன்றியச் செயலா்கள் செல்வக்குமாா், கா்ணன், சிவப்பிரகாசம், மாவட்ட நிா்வாகிகள் குணசீலன், எம்.என். ராஜாராம், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் ஆா். ராஜபூபதி வரவேற்றாா். மின்வாரியப் பிரிவு கோட்ட பொருளாளா் வெற்றிவேல் நன்றி கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G