முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 22nd May 2023 03:53 AM | Last Updated : 22nd May 2023 03:53 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி, கவுள்பாளையத்தில் உள்ள சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி உருவச் சிலைக்கு, மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையிலான கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆசைத்தம்பி, அருணாச்சலம், நகர த்தலைவா்கள் நல்லுசாமி, தேவராஜன், வட்டாரத் தலைவா்கள் சின்னசாமி, பாக்யராஜ் , மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் சித்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.