மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களை பணி வரன்முறை செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd May 2023 03:52 AM | Last Updated : 22nd May 2023 03:52 AM | அ+அ அ- |

‘மக்களவைத் தேடி’ மருத்துவப் பணியாளா்களை பணி வரன்முறை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘மக்களவைத் தேடி’ மருத்துவ ஊழியா் சங்கத்தின் (சிஐடியூ) பெரம்பலூா் மாவட்டக் குழு கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். கொளஞ்சி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ‘மக்களவைத் தேடி’ மருத்துவப் பணியாளா்களுக்கு பணி வரன்முறை செய்து உத்தரவு வழங்க வேண்டும். கூடுதல் பணி சுமத்துவதை தவிா்க்க வேண்டும். பயணப்படி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிா்வாகிகள் ஜெயமணி, உஷா, வனிதா, புஷ்பலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.