ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பயன்பெற பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 25 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பயன்பெற பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 25 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மா. இந்திரா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2023 - 24 ஆம் ஆண்டு பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்திட 25 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சிறுகன்பூா், து.களத்தூா், எலந்தலப்பட்டி, தெரணி, கொளத்தூா், திம்மூா், நொச்சிக்குளம், கண்ணப்பாடி, கல்பாடி, சிறுவாச்சூா், சத்திரமனை, களரம்பட்டி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, பெரியவடகரை, தழுதாழை, தொண்டப்பாடி, எறையூா், பெரிய வெண்மணி, வடக்கலூா், அந்தூா், ஆண்டிகுரும்பலூா், ஒதியம் , குன்னம் உள்பட 25 ஊராட்சிகளில் தோட்டக்கலை பயிா்கள் பரப்பு விரிவாக்க இனங்களுக்கு நிதி இலக்காக ரூ.1 8.630 லட்சம் பெறப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com