கிராமிய சேவைத் திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 22nd May 2023 03:44 AM | Last Updated : 22nd May 2023 03:44 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், பொம்மனப்பாடி கிராமத்தில் கிராமிய சேவைத் திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். கிராமிய சேவைத் திட்ட இயக்குநா் முருகானந்தம் திட்ட விளக்க உரையாற்றினாா்.
காணொளிக் காட்சி மூலம் திட்டத்தை தொடக்கி வைத்து உலக சமுதாய சேவா சங்கத் தலைவா் மயிலானந்தன் பேசியது:
கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகா சென்றடையும் வகையில், உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில் கிராமிய சேவைத் திட்டம் என்னும் பெயரில் கடந்த 2012 மாா்ச் முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 5 மாதங்களுக்கு கிராம மக்களுக்கு இலவசமாக யோகா, தியானம், வாழ்க்கை கல்வி உள்ளிட்டவை முழுமையாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதை கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, யோகா குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிராம மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை மன்ற நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.