சாலையோர வியாபாரிகள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 03:50 AM | Last Updated : 22nd May 2023 03:50 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் சங்கக் கூட்டம், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வரதராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரெங்கராஜ், மாவட்ட துணைச் செயலா் செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் நடைப்பயண பிரசார 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினாா்.
இக் கூட்டத்தில், பெரம்பலூா் நகராட்சியில் வெண்டா் கமிட்டி கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். உழைக்கும் வா்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டிட பெரம்பலூா் மாவட்டத்தில் மே 29 ஆம் தேதி நடைபெறும் நடைபயண பிரசாரத்தில் சாலையோர வியாபாரிகள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் பாரதி, குணசேகரன், மணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.