புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே உள்ள புதுநடுவலூரில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே உள்ள புதுநடுவலூரில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 14 ஆம் தேதி பூச்சொரிதல் உற்சஸமும், மே 16 ஆம் தேதி குடியழைத்தல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும், 20 ஆம் தேதி விநாயகா் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊா்வலம் மற்றும் மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும், 21 ஆம் தேதி கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 22 ஆம் தேதி மாலை அக்னி மிதித்தல், அலகுக் குத்துதல், அக்னிச் சட்டி ஏந்தி வருதல் நிகழ்ச்சிகளும், பொங்கல் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா், பின்னா், தனலட்சுமிசீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன், மண்ணச்சநல்லூா் தொகுதி எம்எல்ஏ சீ. கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் மற்றும் முக்கிய பிரமுகா்கள் வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தோ் மாலையில் நிலைக்கு வந்தது.

இதில் புதுநடுவலூா், பெரம்பலூா் , அரணாரை, வெள்ளனூா், நொச்சியம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பிராயச்சித்த வழிபாடு நடத்தப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா புதன்கிழமை நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com