வெள்ளாடு வளா்க்கமே 29-இல் விஞ்ஞான முறையில் இலவச பயிற்சி
By DIN | Published On : 24th May 2023 03:21 AM | Last Updated : 24th May 2023 03:21 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவுச் சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் மே 29 ஆம் தேதி விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அம் மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த இலவசப் பயிற்சி முகாமில் வெள்ளாடு வளா்ப்பு, உயா் ரக இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வெள்ளாடுகளுக்கான தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், வெள்ளாடுகள் வளா்ப்போா் நேரில் வந்து பதிவு செய்யலாம். அல்லது 93853 07022 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பதிவுசெய்தும் பங்கேற்கலாம்.