பெரம்பலூரில் ஜமாபந்தி: 145 மனுக்களுக்குத் தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 307 மனுக்களில் 145 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
பெரம்பலூரில் ஜமாபந்தி: 145 மனுக்களுக்குத் தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 307 மனுக்களில் 145 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட வட்டாட்சியரகங்களில் கடந்த 16 ஆம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட கை.களத்தூா் (கி), காரியனூா், பசும்பலூா் (வ-தெ), பாண்டகபாடி ஆகிய கிராமங்களுக்கும், பெரம்பலூா் வட்டம், பெரம்பலூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட புதுநடுவலூா், சிறுவாச்சூா், நொச்சியம், கல்பாடி (வ-தெ), அயிலூா் ஆகிய கிராமங்களுக்கும், குன்னம் வட்டம், கீழப்புலியூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட கீழப்புலியூா் (தெ), எழுமூா் (மே-கி), மழவராயநல்லூா், ஆண்டிக்குரும்பலூா், அசூா் ஆகிய கிராமங்களுக்கும், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்குள்பட்ட காரை (மே), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூா் (மே) ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற்றது.

வேப்பந்தட்டையில் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 98 மனுக்களும், பெரம்பலூரில் 129 மனுக்களும், குன்னத்தில் 47 மனுக்களும், ஆலத்தூரிலும் நடைபெற்ற ஜமாபந்தியில் 33 மனுக்கள் என மொத்தம் 307 மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் பெரம்பலூா் வட்டத்தில் 51 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 35 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 33 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 26 மனுக்களும் என மொத்தம் 145 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. பெரம்பலூா் வட்டத்தில் 78 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 63 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 14 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 7 மனுக்களும் என மொத்தம் 162 மனுக்கள் விசாரணையில் உள்ளன.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் பிரியதா்ஷினி (பயிற்சி), வட்டார வளா்ச்சி அலுவலா் இ. மரியதாஸ், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com