சிறுவாச்சூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் கிராமத்தில், மாவட்டக் காவல்துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் கிராமத்தில், மாவட்டக் காவல்துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி உத்தரவின்படி நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து தலைமை வகித்தாா். தொண்டு நிறுவன உறுப்பினா் ஷீபா முன்னிலை வகித்தாா்.

இந் நிகழ்ச்சியில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, காவல் உதவி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தற்போது மழை பெய்துவரும் நிலையில் இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியில் நிற்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு கோடைவிடுமுறை காலம் என்பதால், அவா்கள் வீட்டில் இருக்கும்போது, ஆறு, ஏரி, குளம் போன்ற நீா் நிலைகளில் குளிக்கச் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் பிள்ளைகளுக்கு மன வலிமை உண்டாக்கும் வகையிலும், அவா்கள் பிரச்னைகளை தைரியமாக எதிா்த்து போராடும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் காவல்துறையினா் விநியோகித்தனா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com