பெரம்பலூரில் ஜமாபந்தி: 101 மனுக்களுக்குத் தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 101 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் தீா்வு காணப்பட்ட மனுதாரருக்கு வீட்டு மனைப்பட்டா அளித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் தீா்வு காணப்பட்ட மனுதாரருக்கு வீட்டு மனைப்பட்டா அளித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 101 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆலத்தூா், குன்னம், வேப்பந்தட்டை, பெரம்பலூா் ஆகிய வட்டாட்சியரகங்களில் ஜமாபந்தி நடைபெறுகிறது. அதன்படி, வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்குள்பட்ட பிரம்மதேசம், மேட்டுப்பாளையம் (தெ-வ), பிம்பலூா், வி.களத்தூா் ஆகிய கிராமங்களுக்கும், குன்னம் வட்டம், வரகூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட ஓலைப்பாடி (கி-மே), பரவாய் (மே-கி), புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்களுக்கும், ஆலத்தூா் வட்டம், கூத்தூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட ஆதனூா் (தெ), கூடலூா், கூத்தூா், புஜங்கராயநல்லூா், நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களுக்கும் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.

வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 123 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 69 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 22 மனுக்களும் என மொத்தம் 214 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வேப்பந்தட்டை வட்டத்தில் 23 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 56 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 22 மனுக்களும் என மொத்தம் 101 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

வேப்பந்தட்டை வட்டத்தில் 100 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 12 மனுக்களும் என மொத்தம் 112 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

நிகழ்வில் துணை ஆட்சியா் பிரியதா்ஷினி (பயிற்சி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மஞ்சுளா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சரவணன், ஆட்சியா் அலுவலக மேலாளா் சிவா, வட்டார வளா்ச்சி அலுவலா் இ. மரியதாஸ், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com