பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆலத்தூா், குன்னம், வேப்பந்தட்டை, பெரம்பலூா் ஆகிய வட்டாட்சியரகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்குள்பட்ட பேரையூா், எறையூா், தேவையூா் (வ-தெ), வாலிகண்டபுரம் ஆகிய கிராமங்களுக்கும், குன்னம் வட்டம், வரகூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட துங்கபுரம் (வ-தெ), காடூா் (வ-தெ), கொளப்பாடி ஆகிய கிராமங்களுக்கும், ஆலத்தூா் வட்டம், கூத்தூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட திம்மூா், சில்லக்குடி (தெ-வ), ஜெமீன் ஆத்தூா் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற்றது.

வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 95 மனுக்கள், குன்னம் வட்டத்தில் 83 மனுக்கள், ஆலத்தூா் வட்டத்தில் 15 மனுக்கள் என மொத்தம் 193 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், வேப்பந்தட்டை வட்டத்தில் 22 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 57 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 15 மனுக்களும் என மொத்தம் 94 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. வேப்பந்தட்டை வட்டத்தில் 73 மனுக்கள், குன்னம் வட்டத்தில் 26 மனுக்கள் என மொத்தம் 99 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மஞ்சுளா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ராவணன், ஆட்சியரக மேலாளா் சிவா, வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் இ. மரியதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com