இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 போ் கைது
By DIN | Published On : 07th November 2023 01:21 AM | Last Updated : 07th November 2023 01:21 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்திச் சென்ற பெண் உள்ளிட்ட 2 பேரை திங்கள்கிழமை மங்களமேடு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி உத்தரவின்பேரில், கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை, தயாரித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஞ்சன்குடி கிராமத்தில் மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, சிறப்பு சாா்பு ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த ஆண், பெண் ஆகிய 2 போ் தப்பிச்செல்ல முயன்றனா்.
இதையடுத்து, அவா்களை விரட்டிப் பிடித்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் ரஞ்சன்குடியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல் (45), கண்ணன் மனைவி லெட்சுமி என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 25 மது பாட்டில்கள், ரூ. 8,710 ரொக்கம் மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...