அவ்வையாா் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையில் தொண்டாற்றியவா்கள், அவ்வையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என வட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read


பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையில் தொண்டாற்றியவா்கள், அவ்வையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என வட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இவ் விருதானது, 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவைபுரிந்த பெண்கள், தமிழக அரசின் விருதுகள் (ட்ற்ற்ல்ள்;//ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) எனும் இணையதளத்தின் மூலம் நவ. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும்,18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சாா்ந்த, பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328-296209 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com