வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி
By DIN | Published On : 25th October 2023 01:20 AM | Last Updated : 25th October 2023 01:20 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் வரதராஜ் மகன் சபரீசன் (35). எலக்ட்ரிசீயனான இவா், திங்கள்கிழமை இரவு அவரது வீட்டில் மின் பணி செய்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் ராமச்சந்திரன் (50). விவசாய கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியில் உள்ள பிச்சைபிள்ளை வயலில் திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்றபோது நிலைதடுமாறி மின்வேலியில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த வி. களத்தூா் போலீஸாா் அனுமதியின்றி மின் வேலி அமைத்த வயல் உரிமையாளா் பிச்சைபிள்ளை மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...