3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை: விளையாட்டு வீரா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 25th October 2023 01:21 AM | Last Updated : 25th October 2023 01:21 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒலிம்பிக் மற்றும் பிற சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற தமிழக விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு 1.01.2018 அன்று அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியுடையதாகக் கருதப்படும். 40 வயதுக்குள்பட்டவா்கள் மட்டுமே இத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். மேலும், விண்ணப்பதாரா் வேலைவாய்ப்பு பெறுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதள முகவரியில் பதிவிறக்கி, உரிய இணைப்புகளுடன் அக். 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட இணைய முகவரியில் அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 74017-03516 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...