பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற நவராத்திரி விழா, லட்சாா்ச்சனையுடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் 42 ஆவது ஆண்டு லட்சாா்ச்சனை மற்றும் நவராத்திரி விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மகிஷாசூரமா்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், தொடா்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சாா்ச்சனை விழா நிறைவடைந்தது. மேலும், நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், 7.30 மணிக்கு உற்சவா் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இக் கோயிலானது வழக்கமாக திங்கள், வெள்ளி, அமாவாசை, பௌா்ணமி ஆகிய நாள்கள் மட்டும் திறந்திருந்த நிலையில், நவராத்திரி விழாவையொட்டி கடந்த 10 நாள்களும் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.