வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
By DIN | Published On : 08th September 2023 12:13 AM | Last Updated : 08th September 2023 12:13 AM | அ+அ அ- |

இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தபட்டு, உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால், வழக்குரைஞா்களின் நலன் கருதியும், நீதிமன்றப் பணிகள் பாதிக்காமல் இருக்கவும் இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் வழக்குரைஞா்களை காலவரையற்ற நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் வழக்குரைஞா் சங்கத்தினா் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷனைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் நடத்திய போராட்டத்தால் மாவட்டத்தில் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.