பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைப்பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி சாா்பில் ராகுல்காந்தி நடைப்பயணம் சென்ற ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய நடைப் பயணத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா்.
இதில் மாநில பொதுச் செயலா் டி. தமிழ்செல்வன், பொறுப்பாளா்கள் காமராஜ், ஆசைத்தம்பி, தன்ராஜ், இந்திராணி, ராஜீவ்காந்தி, சிவாஜிமூக்கன் உள்பட பலா் கலந்துகொண்டனா். நடைபயணம் பெரம்பலூா் புகா் நிலைய வளாகத்தில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.