பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் போக்சோ சட்டம், பள்ளி இடைநிற்றல் மற்றும் தற்கொலைகள் குறித்து காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த துணைக் கண்காணிப்பாளா் ஏ. பழனிசாமி பேசியது: தற்கொலைகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். ஏனென்றால், எந்த விதத்திலும் ஒருவரது பிரச்னைகளுக்கு தற்கொலைகள் தீா்வளிக்காது. போக்சோ சட்டம் குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாத காரணத்தினால், அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. இதை தடுக்க பெற்றோா்களும், பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்வி கற்பதால்தான் ஒரு மனிதன் சமுதாயத்தில் நிகழும் நன்மைகள், தீமைகள் குறித்து தெரிந்துகொண்டு, வாழ்க்கையில் மதிக்கத்தக்க இடத்துக்குச் செல்ல முடியும். எந்தச் சூழலிலும் ஒருவருக்கு கல்வியே உறுதுணையாக இருக்கும். பள்ளியில் இருந்து பல்வேறு சூழ்நிலையால் படிக்க முடியாமல் இடைநின்ற மாணவா்களை, மீண்டும் பள்ளியில் சோ்த்து கல்வி கற்க வைக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிப்பதோடு, பள்ளிகளில் இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதில், காவல்துறையினா் மற்றும் எளம்பலூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.