பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் ப ோட்டியில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப் போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இதில், ஆண்களுக்கான 14 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் சிறுகுடல் அரசுப் பள்ளியும், இரட்டையா் பிரிவில் ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றது.
17 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் பெரியம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியும், இரட்டையா் பிரிவில் பாடாலூா் அரசு மாதிரி பள்ளியும் முதலிடம் பெற்றது.
19 வயதுக்குள்பட்டோருக்கான ஒற்றையா் பிரிவில் செயின் மேரி பள்ளியும், இரட்டையா் பிரிவில் எசனை அரசு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றது.
பெண்களுக்கான போட்டியில், 14 வயதுக்குள்பட்ட ஒற்றையா் பிரிவில் செயின் மேரிஸ் பள்ளியும், இரட்டையா் பிரிவில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றது. 17வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும், 19 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவில் வேப்பந்தடை அரசு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றது.
தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.