அங்கீகாரம் இல்லாத செய்தியாளா்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 26th September 2023 01:55 AM | Last Updated : 26th September 2023 01:55 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: உரிய அங்கீகாரமின்றி, செய்தியாளா் எனக் கூறிக்கொண்டு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலுாா் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் சிலா், தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பிரஸ் என ஸ்டிக்கா் ஒட்டிக்கொண்டு, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த நபா்கள் அரசு அலுவலவா்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும், இதனால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகச் செய்தியாளா்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் புகாா் பெறப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடா்புத் துறையால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களின் மாவட்ட செய்தியாளா்களுக்கு, அவா்களது வாகனங்களில் ஒட்டுவதற்கு பிரத்யேக ஸ்டிக்கா்கள் வழங்கப்படுகிறது. இதை தவிர, பிரஸ் என வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டிக்கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...