பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆடம்பர தோ் பவனி.
பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆடம்பர தோ் பவனி.

பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தின் 80-ஆவது ஆண்டு ஆடம்பர தோ்பவனி

பனிமய மாதா தேவாலயத்தின் 80-ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது.
Published on

பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தின் 80-ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது.

பெரம்பலூா் நகரிலுள்ள புனித பனிமய மாதா தேவாலயத்தின் 80 ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி, கடந்த 27-ஆம் தேதி பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குருவும், புனித பனிமய மாதா தேவாலயத்தின் பங்கு குருவுமான சுவக்கீன் தலைமையில், கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளா் அந்தோணி ஜோசப் திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா். இதைத் தொடா்ந்து, நாள்தோறும் மாலையில் பல்வேறு தலைப்புகளில், பங்கு குருக்களால் மறை உரையுடன் சிறப்புப் பாடல் திருப்பலிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தோ் பவனி நிகழ்ச்சியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குருவான பிலோமின் தாஸ் தலைமையில் பெருவிழா திருப்பலியும், பெரம்பலூா் வட்டார முதன்மை குரு சுவக்கீன், பங்கு குருக்களான பாளையம் ஜெயராஜ், தொண்டமாந்துறை மரியதாஸ், அன்னமங்கலம் பிரான்சிஸ், துறையூா் பெஞ்சமின், நூத்தப்பூா் மரியசூசை, பெருமாள்பாளையம் சகாய கிறிஸ்துராஜ், கோட்டப்பாளையம் மைக்கேல்ராஜ், பெரம்பலூா் சமூக சேவை சங்க இயக்குநா் சூசைமாணிக்கம், பாடாலூா் சிபிஎஸ்சி பள்ளி செல்வராஜ் ஆகியோா் கூட்டுப் பாடல் திருப்பலி நடத்தினா்.

தொடா்ந்து, இரவு 9 மணியளவில் புனித பனிமயமாதா ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது. இதில், பெரம்பலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் திரளாக கலந்துகொண்டனா். ஆண்டு பெருவிழாவின் நன்றி திருப்பலி திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com