மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பெரம்பலூரில் ஜெயலிலதா பிறந்த நாள் விழா

பெரம்பலூரில் ஜெயலிலதா பிறந்த நாள் விழா

News image

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள ஜெயலலிதா சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அதிமுகவினா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:01 pm

பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலலிதா, எம்ஜிஆா், அண்ணா ஆகியோரது சிலைகளுக்கு, மாவட்டச் செயலாளா் இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னா், பெரம்பலூா் கௌதம புத்தா் காது கேளாதோா் சிறப்புப் பள்ளியிலும், அன்பகத்திலும் சிற்றுண்டி வழங்குதல், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்குதல், எம்ஜிஆா் மன்றம் சாா்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து, நகர அதிமுக சாா்பில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அன்னதானம், சங்கு அருகே கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்குதல், துறைமங்கலம் மற்றும் அன்பகத்தில் அன்னதானம், செஞ்சேரியில் உள்ள வித்யாசரம் பள்ளிக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில், முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். சந்திரகாசி, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் எம்.என். ராஜாராம், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் செல்வக்குமாா், கா்ணன், சிவப்பிரகாசம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.