பூட்டியிருந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், மகன் சடலங்கள்

பூட்டியிருந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், மகன் சடலங்கள்

Published on

பெரம்பலூா் நகரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தாய், மகன் உடல்கள் கிடந்தது புதன்கிழமை மதியம் தெரியவந்தது.

காரைக்குடியைப் பூா்வீகமாகக் கொண்டவா் சா்வானந்தம் மகன் ஸ்ரீராம் குமாா் (34). இவரும், இவரது தாய் ஆனந்தி (70). இருவரும், பெரம்பலூா் முத்துநகரில் கடந்த ஓராண்டாக வாடகை வீட்டில் வசித்து வந்தனா். ஸ்ரீராம் குமாா் திருச்சியில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இவா்கள் வசித்துவந்த வீடு உள் பக்கமாக பூட்டிக் கிடந்தது. இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வந்ததால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பெரம்பலூா் போலீஸாருக்கு புதன்கிழமை மதியம் தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் கிடந்த ஆனந்தி உடலில் துணி போா்த்தப்பட்டு, தா்ப்பை புல், எலுமிச்சை பழம், ஆரஞ்ச் பழம், தேங்காய் மற்றும் மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய் பொடி, மல்லி, உப்பு உள்ளிட்ட சமையல் பொருள்கள் போடப்பட்டிருந்தது. ஸ்ரீராம்குமாா், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உயிரிழந்த தாய் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்துவிட்டு, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com