அகரம் சிகூா் பகுதியில் நாளை மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், அகரம் சிகூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது.


பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், அகரம் சிகூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா், கீழப்பெரம்பலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (ஜூலை 22) நடைபெறவுள்ளது.
இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப் பெரம்பலூா், கோவில்பாளையம், தேனூா், துங்கபுரம், குழுமூா், கே.ஆா்.நல்லூா், அங்கனூா், அகரம் சீகூா், வயலூா், வயலப்பாடி மற்றும் கிளியப்பட்டு ஆகிய கிராமப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...