பெரம்பலூர்
பெரம்பலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனைச் சாவடிகள்
5 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, மாவட்ட காவல்துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், 5 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, மாவட்ட காவல்துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. சியாம்ளா தேவி தலைமையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
இந்த வாகனச் சோதனையானது, இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தவிா்ப்பதற்காக, பெரம்பலூா் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான திருமாந்துறை, ஊட்டத்தூா், அடைக்கம்பட்டி, அல்லிநகரம், உடும்பியம் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
