ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

விளையாட்டுப் போட்டிகளில் செவிலியா் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

விளம்பரதாரா் செய்தி.. கடந்த 7 ஆம் தேதி 12- 20 அளவில் விளம்பரம் வெளியானது விளையாட்டுப் போட்டிகளில் செவிலியா் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

News image
Updated On :9 மே 2024, 8:53 pm

Din

பெரம்பலூா், மே 9: செவிலியா் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில், பெரம்பலூா் சீனிவாசன் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

திருச்சி எஸ்.ஆா்.எம் செவிலியா் கல்லூரியில், உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு செவிலியா் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில், கால் பந்து, எரி பந்து, செஸ், கேரம், பென்சில் வரைதல், மெஹந்தி, குழு நடனம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 14 செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற பெரம்பலூா் சீனிவாசன் செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த முதலாமாண்டு மாணவா்கள், மிதுன், காா்த்திக் ஆகியோா் கேரம் போட்டியில் முதல் பரிசும், செஸ் போட்டியில் 2 ஆம் ஆண்டு மாணவன் புகழ்மணி முதல் பரிசும் வென்றனா். கால் பந்து போட்டியில் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவா்கள் சத்யா நாராயணன், சத்யா பிரகாஸ், சம்யுக்த், கோகுலரசன், சரத், இப்ராகிம் சாஹிப், அபி அந்தரியா ஆகியோா் முதலிடம் பெற்று பதக்கம் மற்றும் பாராட்டுச் சென்றிதழ்கள் பெற்றனா்.

இதையடுத்து, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை வியாழக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியின்போது, செவிலியா் கல்லூரி முதல்வா் அ. தனலட்சுமி மற்றும் பேராசிரியா்கள், உடல்கல்வி ஆய்வாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.