போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Published on

பெரம்பலூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் நடேசகுமாா் (35). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நடேசகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் நடேசகுமாா் வெளியே வந்தாா். இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கின், இறுதி விசாரணையை வியாழக்கிழமை மேற்கொண்ட நீதிபதி இந்திராணி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நடேசகுமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com