பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பெரம்பலூரில் பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவா் கே. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. மேனகா, சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, கிரேடு 3, 4 அரசு ஊழியா்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பணிக் கொடைத்தொகை ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். பயணப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு மேற்பாா்வையாளராக பதவி உயா்வு வழங்க வேண்டும். அல்லது, மேற்பாா்வையாளா்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல ஆலத்தூரில் வட்டத் தலைவா் ஏ. மல்லிகா தலைமையிலும், வேப்பந்தட்டையில் வட்டாரச் செயலா் ஆா். முத்துச்செல்வி தலைமையிலும், வேப்பூரில் வட்டார பொருளாளா் ஆா். தனலட்சுமி தலைமையிலும் அந்தந்த வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com