சிறுமிக்குப் பாலியல் தொல்லை: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

பெரம்பலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமம், அரசமரம் ஆட்டோ நிறுத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சரவணன் (44). விவசாயியான இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி சரவணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து சரவணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com