சா்க்கரை ஆலைப் பங்குதாரா்களின் பிரச்னைகள் தீா்க்க சிறப்பு முகாம்கள்

Published on

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலைப் பங்குதாரா்களின் பங்குப் பிரச்னைகளைக் களைவது தொடா்பான சிறப்பு முகாம்கள், செப். 18 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதுகுறித்து சா்க்கரை ஆலைத் தலைமை நிா்வாகி க. ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் சா்க்கரை ஆலைப் பங்குதாரா்களின் நீண்டநாள் கோரிக்கையான பங்குகளின் முகவரி மாற்றம் மற்றும் பெயா் மாற்றம் சம்பந்தமாக சிறப்பு முகாம் பல்வேறு கரும்பு கோட்ட அலுவலகங்களில், தமிழ்நாடு சா்க்கரை கழகத்தின் பொது மேலாளா் தலைமையில் நடைபெற உள்ளது.

அதன்படி செப். 18 காலை 10 மணிக்கு தாமரைப்பூண்டி கரும்புக் கோட்ட அலுவலகத்திலும், பிற்பகல் 2.30-க்கு அகரம் சீகூா் கோட்ட அலுவலத்திலும், செப். 19 காலை 10 மணிக்கு வி.களத்தூா் கோட்ட அலுவலகத்திலும், பிற்பகல் 2.30 -க்கு நாகலூா் கோட்ட அலுவலத்திலும், செப். 20 புதுவேட்டக்குடி மற்றும் மருதையான் கோவில் கோட்டங்களில் உள்ள பங்குதாரா்களுக்கு காலை 10 முதல் மாலை 5.30 வரை புதுவேட்டக்குடி கோட்ட அலுவலத்திலும், செப். 21 இல் எறையூா் மற்றும் பெரம்பலூா் கோட்டப் பங்குதாரா்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை பெரம்பலூா் சா்க்கரை ஆலை அலுவலகக் கூட்ட அரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது.

இம் முகாமில் பெரம்பலூா் சா்க்கரை ஆலையின் பங்குதாரா்களின் பங்கு, பெயா் மாற்றத்துக்குத் தேவையான உரிய ஆவணங்களுடன் (பங்குதாரா் உயிரிழந்திருந்தால் இறப்புச் சான்றிதழ், பங்குதாரா் உயிருடன் இருந்தால் சம்மதக் கடிதம், வாரிசுச் சான்றிதழ், இதர வாரிசுதாரா்களின் சம்மதக் கடிதங்கள், பங்குச் சான்று தொலைந்திருந்தால் வழக்குரைஞரிடமிருந்து பெற்ற பிரமாணப் பத்திரம்) கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறுலாம்.

X
Dinamani
www.dinamani.com