வேகத்தடை அமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

Published on

பெரம்பலூா் மாவட்டம், அயன்பேரையூா் தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் நூா் முஹம்மது தலைமையில், பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதித் தலைவா் முஹம்மது ரபீக், வி.களத்தூா் ஊராட்சிக் குழுத் தலைவா் இஸ்மாயில், செயலா் முஹம்மது ஆகியோா் மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளா் நந்தகுமாரிடம் வியாழக்கிழமை அளித்த மனு:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூா் பிரிவுச் சாலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இப் பகுதியில் வேகத்தடுப்புகள் இல்லாததும், சாலை வளைவாக இருப்பதாலும், இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாததால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், இப் பகுதி மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, சாலை விபத்துகளை தடுக்க வேகத்தடுப்புகளும், மின் விளக்குகளும் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com